கோகா-கோலா கனடா போட்டிலிங் நிறுவனத்தின் முதலீட்டை வரவேற்பு!

பிராம்ப்டன் — ஒன்டாரியோ அரசு, கோகா-கோலா கனடா போட்டிலிங் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் 141 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான முதலீட்டை வரவேற்கிறது. இம்முதலீடு, பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி, விநியோக மற்றும் விற்பனை மையத்தைப் புதுப்பித்து விரிவாக்குவதற்காக செய்யப்படுகிறது.

இவ்விரிவாக்கத்தின் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது 20 மில்லியன் கூடுதல் கேஸ்களை உற்பத்தி செய்யக்கூடிய நவீன தொழில்நுட்ப உற்பத்தி வரிசை நிறுவப்படும். கட்டுமான காலத்தில் 500 வரை உயர்ந்த ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பான உற்பத்தி மற்றும் வேளாண்-உணவு உற்பத்தித் துறைகளில் மாகாணத்தின் முன்னணி நிலையை இது வலுப்படுத்தும் என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“உலகத் தரம் வாய்ந்த ஒன்டாரியோ தொழிலாளர்களின் திறமைகளில் நம்பிக்கை வைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என ஒன்டாரியோ முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார். “எங்கள் அரசு, வரிவிதிப்பை குறைப்பதன் மூலம் மற்றும் தேவையற்ற நிர்வாகத் தடைகளை நீக்குவதன் மூலம் தொழிலாளர்களை பாதுகாத்து, புதிய முதலீடுகளை ஆதரித்து, G7 நாடுகளிலேயே மிகுந்த போட்டித்திறன், நிலைத்தன்மை மற்றும் தன்னிறைவு கொண்ட பொருளாதாரத்தை உருவாக்கத் தொடரும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

G7 நாடுகளிலேயே மிக வலுவான, நிலைத்தன்மை வாய்ந்த மற்றும் போட்டித்திறன் மிக்க பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில், ஒன்டாரியோ அரசு வரிவிதிப்பையும் நிர்வாகத் தடைகளையும் குறைத்து, ஆண்டுதோறும் வணிகங்களுக்கு 12 பில்லியன் டொலர் வரை சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒன்டாரியோ 213 பில்லியன் டொலருக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததுடன், 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு