கொத்தியாபுலையில் கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு;மற்றுமொருவர் சடலமும் கிணற்றுக்குள்…

ட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை நெல்லிக்காடு பால்பண்ணை பகுதிக்குச் சென்ற பொதுமக்கள், அங்கிருந்த பொதுக்கிணறு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்பதை உணர்ந்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அவதானித்து, உடனடியாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

விரைந்து வந்த பொலிஸார் அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விசாரணைகளின்படி, மீட்கப்பட்டவர் கொத்தியாபுலையைச் சேர்ந்த 26 வயதுடைய முருகமூர்த்தி ரனுஜா எனத் தெரியவந்துள்ளது.

நேற்று அவர் தனது மகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரது மகளைத் தூக்கி வீசிவிட்டு, ரனுஜாவைத் தாக்கி இந்தக் கிணற்றுக்குள் தள்ளியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், அதே கிணற்றினுள் மற்றுமொரு சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.

இச்சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் காணப்பட்ட காலணியை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ள போதிலும், முறையான மரண விசாரணை மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் பின்னரே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றப் பதில் நீதபதி தியாகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் கடத்தப்படும் பெண்கள், கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட கிணற்றுக்குள் வீசப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் கடத்தப்பட்டு, அவர்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அவர்கள் இக்கிணற்றுக்குள் தள்ளப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

எனினும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே இதன் பின்னணி குறித்து வெளியிடமுடியும் என கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Ir bri

ஈரான் பிரித்தானியாவுக்கு கடும் எச்சரிக்கை

March 20, 2026

அமெரிக்கா, தனது இராணுவ தளங்களை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியிருப்பது தாக்குதலில் நேரடி பங்கேற்பாகவே பார்க்கப்படும் என ஈரானின் வெளிவிவகார

45

வடமராட்சியில் அதிபரின்றி இயங்கும் பாடசாலை

March 20, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் உள்ள யா/ கணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் கடந்த ஐந்து மாதங்களாக அதிபர் நியமிக்கப்படாத நிலைமை

Sarath

2500 மீள்குடியேற்ற வீடுகள் மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்!

March 20, 2026

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் 2500 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இந்த வீடுகளை எதிர்வரும் 3

sanakiyan

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிப் போரில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அது 2764 என்று கூறுவது வேடிக்கை – சாணக்கியன் இராசமாணிக்கம்

March 20, 2026

2009 இறுதிப் போரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமோ அந்த எண்ணிக்கை 2764 என்று

min

இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

March 20, 2026

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய

Ali saf

இலங்கைக்கு சடுதியாக வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் திடீர் விஜயங்களின் பின்னணி என்ன?

March 20, 2026

இலங்கைக்கு சடுதியாக வருகைதரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. மாறாக நாம்

kid

கொத்தியாபுலையில் கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு;மற்றுமொருவர் சடலமும் கிணற்றுக்குள்…

March 20, 2026

ட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்

Nalinda Jayatissa

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ

March 20, 2026

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும்

Bimal PArl

பாராளுமன்றில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு குறித்து அமைச்சர் கருத்து

March 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல்

no

ஹொலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்

March 20, 2026

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார். அவர் காலமான

bima

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான

gaze

இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி சட்டம் ஒத்திவைப்பு

March 20, 2026

அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான