கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள் மீது திணிக்கமாட்டோம் – ஹர்ஷன நாணயக்கார

மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவைப் பகிரங்கமாக வெளியிட்டு, பொதுமக்களிடமிருந்து அதுகுறித்த அபிப்பிராயங்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவ்வரைவு தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பிவைப்பதற்கு நீதியமைச்சினால் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி இன்னும் ஒரு வாரகாலத்தில் முடிவுக்கு வரவுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று வியாழக்கிழமை (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து பரவலாக முன்வைக்கப்பட்டுவரும் கரிசனைகள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணக்கார, ‘1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தர சட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கமைவாக இப்புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பெறப்பட்டு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய சட்ட வரைபை பொதுமக்களின் கருத்தறிவதற்காகப் பகிரங்கமாக வெளியிட்டு, இருமாத கால அவகாசத்தை வழங்கியிருக்கிறோம்’ எனச் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ‘மக்கள் ஏற்றுக்கொள்ளாத, அவர்களால் கையாளமுடியாத சட்டங்களை நாம் மக்கள்மீது திணிக்கமாட்டோம். புதிய சட்டங்களை உருவாக்கி, எமது ஆட்சிக்காலத்தில் நாம் இத்தனை சட்டங்களை உருவாக்கினோம் எனப் பெருமிதம் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. மாறாக எந்தவொரு சட்டம் உருவாக்கப்பட்டாலும், நாட்டுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படும். ஆகையினாலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வெளியிட்டு, அதுகுறித்த அபிப்பிராயங்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அவ்வரைவு மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்’ என்றும் அவர் எடுத்துரைத்தார்.

அதனையடுத்து ‘இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கென புதிதாக பிரத்யேக சட்டமொன்று அவசியமில்லை என்ற நிலைப்பாட்டையே மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வெளிப்படுத்தி வந்தன. ஆனால் ஆட்சிபீடத்தில் ஏறிய பின்னர் அந்நிலைப்பாட்டிலிருந்து விலகி, பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்ய முற்படுவது ஏன்?’ என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியதாவது;

நாம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவோம் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவோம். ஆனால் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் போன்ற சம்பவங்கள் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், பயங்கரவாத செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ‘பயங்கரவாதம்’ எனும் பதம் மிகவும் குறிப்பாக வரையறை செய்யப்பட்ட, சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறான சட்டமொன்று அவசியமாகும். மாறாக புதிய சட்டத்தைக் கொண்டுவந்து எந்தவொரு தரப்பினரையும் ஒடுக்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. பொதுமக்களின் சுதந்திரம் எப்போதும் பேணப்படும் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்