கிழக்கு மீனவர் தொழிற்சங்கத் தலைவர் கண்டனம்

மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு, கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வெய்ஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவருமான இரத்தினம் பத்மநாதன், பாலமீன்மடு திராய்மடு மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயந்தீஸ் ரூபசேன ஆகியோர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த காலத்தில் மீன்பிடி அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் கல்லாறு, காத்தான்குடி, பாலமீன்மடு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் மீனவர்களின் வளர்ச்சிக்காக ஒரு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்து அந்த பகுதி மீனவ சங்கங்களிடம் கையளித்தார்.

இவ்வாறு அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மட்டும் இயங்கிக்கொண்டிருப்பதுடன் கல்லாறு, காத்தான்குடி ஆகிய இரண்டும் இயங்காமல் பழுதடைந்து துருப்படித்து பாழடைந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் பாலமீன்மடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அந்த பகுதியில் உள்ள வில் 300 படகுகளுக்கு மேற்பட்ட படகுகள் பயன்பெற்று வருகின்றது. அதேபோல் களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அந்த பகுதி படகுகளை சேர்ந்த மீனவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

நான் தலைவராக இருந்தபோது தான் தரப்பட்டது. இதனை நாங்கள் தனிநபர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் வருவாயில் மீனவர் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் மரண செலவுக்கு பணம் வழங்கி வருகின்றோம் அதுமட்டுமல்ல பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பணம் வழங்கி வருகின்றோம்.

பாலமீன்மடு ஒரு பெரிய கிராமம். அங்கு ஒரு மாதத்தில் 3 மரணச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஒரு மரணச்சடங்கிற்கு 10 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் மீனவர் சங்கத்துக்கு வருவாயாக வரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலை செய்துவரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மத்திய அரசில் இருந்து வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்கள் கையில் இருந்து பறிபோகுமானால் நாங்கள் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல, வடக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை