கிராஸ்க்ளோக்னரில் மலையேற்றத்தின் போது காதலி மரணம்; காதலனுக்கு எதிராக வழக்கு

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு உதவி தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்ப்ரூக் அரசாங்க தரப்பு சட்டதரணிகள் காதலன் மீது ‘கடுமையான கவனக்குறைவால் நேரிட்ட கொலை’ என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர் மீது 09 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அனுபவக் குறைவு: போதிய அனுபவமில்லாத காதலியை மிகக் கடினமான குளிர்கால மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றது.

காலதாமதம்: திட்டமிட்ட நேரத்தை விட 2 மணிநேரம் தாமதமாக மலையேற்றத்தைத் தொடங்கியது.

தவறான காலணி: பாறைகளும் பனியும் நிறைந்த பகுதிக்கு, பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் மென்மையான ‘Snowboard boots’-களை காதலி அணிய அனுமதித்தது.

எச்சரிக்கையை மீறியது: மணிக்கு 74 கி.மீ வேகத்தில் காற்று வீசியபோதும், -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் மலையேற்றத்தைத் தொடர்ந்தது.

உதவியை மறுத்தது: இரவு 10:50 மணியளவில் உதவிக்கு வந்த பொலிஸ் ஹெலிகொப்டரை நோக்கி அவசர சமிக்ஞை எதையும் காட்டாமல் பயணத்தைத் தொடர்ந்தது.

தொலைபேசி மௌனம்: பொலிஸார் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது தனது அலைபேசியை ‘Silent’ முறையில் வைத்தது.

பாதுகாப்பின்மை: காதலியை விட்டுப் பிரிவதற்கு முன் அவருக்கு முறையான பாதுகாப்பு உடைகளையோ அல்லது அவசர காலப் போர்வைகளையோ வழங்கத் தவறியது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, எதிர்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடும் கூட்டாளிகளுக்கு இடையிலான பொறுப்புணர்வை வரையறுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்,” என ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காதலன் தரப்பு சட்டதரணி, “இது ஒரு திட்டமிடப்படாத துயரமான விபத்து மட்டுமே. இருவரும் சரிசமமான அனுபவத்துடனும், முழு விருப்பத்துடனமே இந்த மலையேற்றத்தைத் ஆரம்பித்தனர்,” என வாதிடுகிறார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.