கிண்ணியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது இன்று (18.2.2026) காலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமக்கான நீதியைக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

கடந்த டித்வா புயல் அனர்த்தத்தின் போது ஈச்சந்தீவு கிராமத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நஷ்டஈடு அல்லது விசேட கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.​

இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,​”எமது மாணவர்களுக்கான கொடுப்பனவு ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை விளக்குமாறு கோரி கடந்த டிசம்பர் 31ஆம் திகதி கிண்ணியா பிரதேச செயலாளருக்குக் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தோம்.

ஆனால், இதுவரை அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.” பிரதேச செயலகத்தில் தீர்வு கிடைக்காத நிலையில், இம் மக்கள் திருகோணமலை மாவட்டச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்து அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட திகதி கடந்தும் கிண்ணியா பிரதேச செயலகம் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதேச செயலாளரிடம் கையளித்த மக்கள், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, உடனடியாகத் தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்தனர்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு