“காவிரி பிரச்சினையில் மல்லிகார்ஜுன கார்கேவின் நிலைப்பாடு என்ன?” – காங்கிரஸ் கட்சிக்கு செக் வைத்த சீமான்!

சென்னை
காவிரி பிரச்சினையில் தமிழ் இனத்தின் எதிர்காலத்தை மூன்று கையெழுத்தில் நாசமாக்கியது காங்கிரஸ் கட்சிதான் என்றும், இந்த விவகாரத்தில் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உண்மை நிலைப்பாடு என்ன என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்!
காவிரி ஆற்றின் குறுக்கே ‘மேகதாது’ பகுதியில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்குரிய நீர்ப் பங்கீட்டை வழக்கம்போல் வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும் சென்னை ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி தமிழ் பேரினத்தின் குருதி:
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாகப் பேசிய சீமான், “காவிரி என்பது நம்மைப் பொறுத்தவரை வெறும் ஆறோ அல்லது நதியோ அல்ல; அது நமது தாய்! அதில் ஓடி வருவது வெறும் தண்ணீர் அல்ல; தமிழ் பேரினத்தின் குருதி! 1924-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தை அன்றைய ஆட்சியாளர்கள் புதுப்பிக்கத் தவறியதால், கர்நாடகா அணைகளைக் கட்டத் தொடங்கிப் பிரச்சினை பூதாகரமானது. உச்ச நீதிமன்றம் இறுதியாக 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்க உத்தரவிட்டும் கர்நாடகா அதைத் தருவதில்லை. அணைகள் நிரம்பி வழியும் போது, அணை உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மட்டுமே உபரி நீரைத் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுகிறார்கள்” என்று சாடினார்.
அரசியல் தலைவர்கள் மீது சரமாரி விசனம்:
மேலும் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரைச் சந்திக்கச் செல்ல இருந்தபோது, ‘இங்கே வர வேண்டாம், பிரச்சினை ஏற்படும்’ என்று ஒரே வார்த்தையில் கூறித் திருப்பி அனுப்பினர். ஆனால், இங்கோ சிலர் முதலமைச்சர் கடவுளின் குழந்தை என்பதால்தான் மழை பெய்து தண்ணீர் வருகிறது எனக் கூறுகிறார்கள். கடவுளின் குழந்தை இங்கிருந்தால் மழை ஏன் கர்நாடகாவில் பெய்ய வேண்டும்?” என விமர்சித்தார்.
காங்கிரஸுக்குச் சீமான் வைத்த செக்:
“முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினால், அவர் இந்தியராகப் பேசுகிறாரா அல்லது கர்நாடக மாநிலத்தவராகப் பேசுகிறாரா என்பது வெளிச்சத்திற்கு வரும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, காவிரி தொடர்பான வழக்கை திரும்பப் பெற வைத்ததே அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ்தான். கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறத் தமிழ்நாட்டிலிருந்து சென்று வாக்கு சேகரித்தார்கள். தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தர முடியாது என்று கூறுபவர்களுக்காகவா அங்கு சென்று பிரச்சாரம் செய்தீர்கள்? ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் எதிர்காலத்தையும் சீரழித்தது காங்கிரஸ் கட்சிதான்!” எனச் சீமான் தனது பேச்சில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#Seeman #NTK #CauveryIssue #MekedatuIssue #MallikarjunKharge #Congress #ThalapathyVijay #ChiefMinisterVijay #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #TamilNews
1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109