தலங்கம பகுதியில் அடையாளம் காணப்பட்ட இளைஞனின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2025.02.04 அன்று தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
தலங்கம டிப்போவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில், பத்தரமுல்லை நோக்கிச் செல்லும் பிரதான சாலையின் இடது புறத்தில் அமைந்துள்ள காலியான நிலப்பகுதியில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இறந்த நபர் பண்டாரவளை லியன்கஹவெல வத்த பிரதேசத்தைச் சேர்ந்த சத்திய வேலு யோகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலங்கம காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.