காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும் அப்படியே ஷாக் ஆக வைத்துவிட்டது. தனுஷுக்கு என்னாச்சு என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரிட்டி சனோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் தேரே இஷ்க் மெய்ன் காதல் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹீரோ தனுஷ், ஹீரோயின் க்ரிட்டியிடம் காதல் பற்றி கேட்டார்கள் செய்தியாளர்கள்.
முதலில் இருவருமே எதுவும் சொல்லாமல் நின்றார்கள். அதன் பிறகு எனக்கு தெரியவில்லை என்றார் தனுஷ். அதை கேட்ட ஒருவரோ காதல் பற்றி சொல்ல தனுஷுக்கு வயது போதாது போன்று என்றார்.
காதல் என்பது ஓவர் ரேட்டட் எமோஷன் என்று நினைக்கிறேன் என பதில் அளித்தார் தனுஷ். காதல் என்பது ஒன்றும் இல்லை என்று தனுஷ் தெரிவித்ததை கேட்டு கோலிவுட் ரசிகர்கள் தான் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தனுஷ் சொன்னதை கேட்ட க்ரிட்டியோ தேரே இஷ்க் மெய்ன் பட சங்கர் கதாபாத்திரம் இந்த கருத்தை ஏற்காது என்றார். அதற்கு தனுஷோ, நான் சங்கர் மாதிரி இல்லை என்று ஏற்கனவே கூறிவிட்டேன் என்றார்.
காதல் திருமணம் செய்த தனுஷ் தற்போது காதல் எல்லாம் ஒன்னுமே இல்லை என்று சொல்லியிருப்பது தான் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு யாத்ரா, லிங்கா என்று இரு மகன்களுக்கு தந்தை ஆனார் தனுஷ். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள்.
பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் கழித்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு விவாகரத்து அளித்து உத்தரவிட்டது குடும்ப நலநீதிமன்றம். ஐஸ்வர்யாவை பிரிந்ததில் இருந்து பிரேக்கே எடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
இந்நிலையில் தான் தனுஷுக்கும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. அதை தனுஷ் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் தனுஷ் தன் காதலர் இல்லை என்று மிருணாள் தாகூர் விளக்கம் அளித்தார். அதன் பிறகு காதல் பேச்சு அடங்கிவிட்டது.
வழக்கமாக தனுஷ் நடிப்பில் ஒரு படம் ரிலீஸானால் அதை பார்க்கும் அனைவரும் நடிப்பு ராட்சசனின் நடிப்பை பற்றி மட்டுமே பேசுவார்கள். இந்நிலையில் தான் தேரே இஷ்க் மெய்ன் விஷயத்தில் க்ரிட்டியின் நடிப்பு பற்றியும் ரசிகர்கள் பெருமையாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தேரே இஷ்க் மெய்ன் விழாவில் க்ரிட்டியை பத்திரமாக அழைத்து வந்தார் தனுஷ். தான் ஒரு பெரிய ஸ்டார் என்பதை மறந்துவிட்டு அவர் க்ரிட்டிக்கு பாடிகார்டு போல இருந்தது ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டது. தனுஷுக்கு ரொம்ப நல்ல மனசு என்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.