காசா மீது தொடரும் இஸ்ரேல் தாக்குதல்கள்

காசா பகுதி முழுவதும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் வான்தாக்குதல்களில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒரு கூடாரத்தை ஹெலிகாப்டர் தாக்கியதில் பலர் உயிரிழந்ததாகவும், இது அண்மைய காலத்தில் நடந்த மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த அக்டோபரில் அமலுக்கு வந்த இரண்டாம் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர், இத்தாக்குதல்கள் மிகக் கடுமையானவை என பாலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கு ரஃபா பகுதியில் நிலத்தடிக் கட்டமைப்புகளில் இருந்து வெளியேறிய “எட்டு தீவிரவாதிகள்” அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த நான்கு தளபதிகள், ஆயுத களஞ்சியங்கள், ஆயுத உற்பத்தி மையங்கள் மற்றும் மத்திய காசாவில் உள்ள இரண்டு ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள், காசா மீது இஸ்ரேல் அரசின் கொடூரமான அழிப்பு போராட்டம் தொடர்கிறது என்பதற்கான சாட்சி என ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா உடனடியாக தலையிட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. 2025 அக்டோபர் 10ஆம் திகதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து மட்டும் 509 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், நான்கு இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்