காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் புதுச்சேரி வந்தடைந்தார். அவரிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு கே.சி வேணுகோபால் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்
காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி வேணுகோபால் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னை வந்தடைந்த அவர் புதுச்சேரியில் நடைபெறும் பாதயாத்திரையில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் கே.சி வேணுகோபால் ஆலோசனை நடத்துவார் என தெரிகின்றது. பிறகு சென்னைக்கு வந்து அங்கிருக்கும் மாவட்ட செயலாளர்களுடனும் கே.சி வேணுகோபால் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தான பேச்சுக்கள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. குறிப்பாக திமுக -காங்கிரஸ் கூட்டணி இணையுமா ? இணையாதா ? என பரபரப்பான விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் இருந்து வருவதால் இக்கூட்டணி இம்முறை இணையாது என்கின்றனர் சிலர்.
ஆனால் எந்த வித மோதல்களும் இல்லை, காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக திமுக குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என்கின்றனர் சிலர். இப்படியான நிலையில் இக்கூட்டணி குறித்துகே.சி வேணுகோபால் ஏதேனும் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார் கே.சி வேணுகோபால்.
இன்று புதுச்சேரி வந்திருக்கும் அவரிடம் கூட்டணி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் புறக்கணித்துவிட்டு சென்றார் கே.சி வேணுகோபால். இதனால் திமுக -காங்கிரஸ் கூட்டணி குறித்தான குழப்பங்கள் தொடர்ந்து நீண்டுகொண்டே வருகின்றது.
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக திமுக -காங்கிரஸ் வெற்றிக்கூட்டணிகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையுமா ? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகின்றது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை திமுகவிடம் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனராம்.
அதில் மிக முக்கியமான கோரிக்கையாக ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கை இருந்து வருகின்றது. ஆனால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சிற்கு இடம் கிடையாது என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. திமுக அரசும் ஆட்சியில் பங்கு என்ற பேச்சிற்கு இடமில்லை என சொல்கின்றனர். திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கிடையாது என்கின்றனர்.