தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ்பெற்ற ‘கனா காணும் காலங்கள்’ சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ‘ஸ்டார்’, ‘கிஷ்’, ‘டாடா’, ‘ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்திற்கு HI என்று பெயரிடப்பட்டுள்ளது.