சூர்யாவின் கருப்பு மற்றும் சூர்யா 46 படங்கள் ஒரே சமயத்தில் தயாராகிக்கொண்டு வருகின்றது. இந்த இரண்டு படங்களில் சூர்யா ரசிகர்களாலும் பொதுவான ரசிகர்களாலும் அதிகம்
சூர்யா ஒரே சமயத்தில் இரு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கின்றார். ஒன்று ஆர்.ஜே பாலாஜி இயக்கும் கருப்பு. மற்றொன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46. இவ்விரு படங்களில் தான் சூர்யா தற்போது நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவ்விரு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் தான். இதில் கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் முதலில் துவங்கப்பட்டது.
அதன் பிறகு தான் சூர்யா 46 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் இன்னும் கருப்பு திரைப்படம் திரையில் வெளியாகவில்லை. மறுபக்கம் சூர்யா 46 திரைப்படத்தின் வேலைகள் மளமளவென நடைபெற்று வருகின்றது. அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என்றே தெரிகின்றது. ஆனால் கருப்பு திரைப்படமும் ஏப்ரல் மாதம் தான் வெளியாகும் என சொல்லப்படுவதால் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்ற குழப்பம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது.