மார்க்கம் நகரில் நடைபெற்ற 15-ஆவது ஆண்டு தைப்பொங்கல் விழாவில் தமிழ் சமூகத்தினருடன் இணைந்து பங்கேற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. என ஒன்ராறியோவின் பிரதமர் டக் ஃபோர்ட் (Doug Ford) பதிவிட்டுள்ளார்.
தைப்பொங்கல் என்பது நன்றியுணர்வு, புதுப்பிப்பு மற்றும் ஒன்டாரியோ மாகாணத்திற்கு தமிழ் குடும்பங்கள் வழங்கி வரும் சிறப்புமிக்க பங்களிப்புகளைப் போற்றும் காலமாகும். இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்த ஆண்டாக அமைய என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.