கனடாவை ஒரு ஆண்டிற்குள் சீனா கபளீகரம் செய்துவிடும் – டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் கனடா இடையே நீண்ட காலமாக வர்த்தக மற்றும் ராணுவ ரீதியிலான நல்லுறவு இருந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் ‘கோல்டன் டோம்’ எனப்படும் பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு கவச திட்டத்தை கிரீன்லாந்து மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் செயல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்கு கிரீன்லாந்து பகுதியை பயன்படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த மெகா பாதுகாப்பு திட்டத்தை கனடா அரசு தற்போது நிராகரித்துள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்ரூத் சோசியல் வலைதளத்தில் கனடாவை கடுமையாக சாடியுள்ளார்.

‘அமெரிக்கா வழங்கும் இலவச பாதுகாப்பிற்கு கனடா நன்றி இல்லாமல் இருக்கிறது. அமெரிக்கா இருப்பதால்தான் கனடா நாடே உயிர்ப்புடன் இருக்கிறது’ என்று அவர் காரசாரமாக குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டதை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘சீனாவுடன் கனடா தற்போது காட்டும் நெருக்கம் மிகவும் ஆபத்தானது. இன்னும் ஒரு ஆண்டிற்குள் கனடாவை சீனா கபளீகரம் செய்துவிடும்’ என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். கனடா மற்றும் சீனா இடையே கடந்த 17ம் தேதி 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான 100 சதவீத வரியை குறைக்க கனடா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக, கனடாவின் கனோலா விதைகளுக்கு விதித்திருந்த 84 சதவீத வரியை சுமார் 15 சதவீதமாக குறைக்க சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த வர்த்தக மாற்றம் அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அமெரிக்காவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள கனடா தூதர் பாப் ரே, ‘பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்கா மிரட்டி பணம் பறிக்கப் பார்க்கிறது’ என்று குற்றம்சாட்டினார். மேலும் கனடா பிரதமர் மார்க் கார்னி, ‘அமெரிக்காவால் கனடா வாழவில்லை. நாங்கள் கனடா மக்களாக இருப்பதால்தான் கனடா செழிப்பாக உள்ளது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரம் மற்றும் சீன வர்த்தகப் போரால் இரு நாடுகளிடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்