கனடாவில் தற்காலிக விசாவுடன் தங்கியிருக்கும் நபர்கள் குறித்த அரசின் தீர்மானம்

தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார்.

கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) மற்றும் கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) சில தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கக்கூடியதாக இருந்தாலும், தற்காலிக விசாவுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என்பதைக் கணக்கிடுவதற்கான எளிய முறை தற்போது இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குடிவரவு துறையின் தகவலின்படி, 2026 ஆம் ஆண்டில் சுமார் 19 இலட்சம் தற்காலிக விசாக்கள் (வேலை மற்றும் கல்வி அனுமதிகள் உட்பட) காலாவதியாக உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 21 இலட்சத்துக்கும் அதிகமான தற்காலிக விசாக்கள் காலாவதியாகியுள்ளன.

“உலகின் பல நாடுகள் ஏற்கனவே இத்தகைய கண்காணிப்பு முறைகளை பயன்படுத்துகின்றன. கனடாவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து,” என லீனா டியாப் கனடியன் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

CBSA-வின் புலனாய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் துணைத் தலைவர் ஆரன் மெக்ரோரி, கடந்த ஒக்டோபர் 21 அன்று நாடாளுமன்ற குழுவில் வழங்கிய சாட்சியத்தில், கனடாவை விட்டு வெளியேறும் நபரின் பயண முறை, பிறந்த திகதி மற்றும் பயண ஆவணங்களை கண்காணிக்க முடியும் என்றார்.

ஆனால், விசா காலாவதியான காரணத்தால் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுகிறாரா என்பதை தானாகவே கண்டறியும் வசதி தற்போது இல்லை என்றும், அவ்வாறு சரிபார்ப்பது ஒவ்வொரு வழக்காக மேற்கொள்ள வேண்டிய கடினமான செயல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் தற்காலிக விசாவுடன் கனடாவுக்கு வந்தவர்களால் அகதி கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன. அந்த ஆண்டில் 1,12,000-க்கும் அதிகமான தற்காலிக குடியிருப்பாளர்களும் சுமார் 22,000 மாணவர் விசா வைத்திருந்தவர்களும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதில் தற்காலிக குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்களில் 14 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் விசா வைத்திருந்தவர்களில் 20 சதவீத விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அகதி கோரிக்கைகளை பயன்படுத்தி கனடாவில் தங்கும் காலத்தை நீட்டிக்கும் முயற்சிகளைத் தடுக்கும் நோக்கில், எல்லை பாதுகாப்பு சட்டமூலம் C-12 கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் படி, 2020 ஜூன் 24க்குப் பிறகு கனடாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்கியிருப்பவர்கள் தாக்கல் செய்யும் அகதி விண்ணப்பங்கள், அகதி விசாரணைக்குழுவு்கு அனுப்பப்படமாட்டாது.

குடிவரவு முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதே அரசின் இலக்காக இருப்பதாக அமைச்சர் லீனா டியாப் கூறினார். 2024 இல் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான இலக்கு 4,85,000 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 3,93,500 பேர் அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஒன்லைன் கடவுச்சீட்டு புதுப்பிப்பு திட்டம் (2024 டிசம்பரிலிருந்து) மற்றும் டிஜிட்டல் விசா முயற்சி (2025 நவம்பர் 27 முதல் மொராக்கோ பயணிகளுக்கு) ஆகிய இரண்டு புதிய டிஜிட்டல் திட்டங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்கள் குடிவரவு அமைப்பு பழமையானது. அதை நவீனமயமாக்குவது ஒரு பெரிய சவால். ஆனால் அந்தப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன,” என லீனா டியாப் மேலும் கூறியுள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.