கட்சியை எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுங்கள் – டக்ளஸ் தேவானந்தா

தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலில், தன்னுடைய கைது மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுக்கு தெளிபடுத்தும்போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாற்றம் பற்றிய எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு இதுவரையில் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத நிலையே தொடருகின்ற போதிலும், பல்வேறு சவால்கள் மிகுந்த சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழக்க வேண்டும் என்பதே. நியாயமான நிலைப்பாடாக இருக்கும்.

ஆனால், எந்தவொரு அரசும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தாம்பாளத் தட்டில் ஏந்தி வந்து தாமாக தரப்போவதில்லை. எமது நண்லெண்ண சமிஞ்ஞையாலும் சினேக பூர்வ உரையாடலாலும் தேசிய நல்லிணக்க வழிநின்றே நாமே எதையும் பெற வேண்டும்.

கடந்த கால அரசுகளும் நாம் கேட்டதற்கிணங்கவே பலவற்றிக்கும் தீர்வு தந்தார்கள். கடந்த காலங்களில் போதிய அரசியல் பலம் எமக்கு இருந்திருந்தால் முழுமையாக எதையும் பெற்றிருக்கலாம்.

கடந்த கால அரசுகளோடு நாம் ஆட்சிகளில் பங்கெடுத்திருந்தாலும் அவர்களோடும் எமக்கு முரண்பாடுகள் இருந்தன. ஆனாலும் பேசித்தீர்ப்பதற்கு ஒரு தளம் இருந்தது.

நாம் ஆட்சிகளில் பங்கெடுத்தமையே அந்த தளம். கடந்த கால அரசுகளை போலவே இந்த ஆட்சியோடும் எமக்கு முரண்பாடுகள் உள்ளன. ஆனாலும் எதிர்ப்பு அரசியல் நடத்துவோரைப்போல் நாமும் அரசை கடும்போக்கில் விமர்சிங்க முடியாது.

இந்த அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் தரவில்லையென்றால் அதற்கு இந்த அரசு காரணம் என்று கூறிவிட முடியாது. கடந்த கால அரசுகளோடு நாம் எவ்வாறு கேட்டு பெற்றோமோ, அது போலவே இந்த அரசுடனும் பேசியே பெற வேண்டும்.

ஆளும் கட்சி சார்ந்த தமிழ் எம் பிக்கள் அரசுக்குள் கரைந்தே போயுள்ளனர். அவர்களுக்கு அந்த ஆற்றல் அனுபவம் அக்கறை கிடையாது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே ஆளும் கட்சி தமிழ் எம்பிக்கள் தவிர்க்க முடியாமல் நிற்பார்கள்.

ஆகவே நாமே அரசுடன் பேச வேண்டும். அதற்கு எமக்கு பிரதிநித்துவம் இல்லை. அரசோடு பேச வல்ல அதிகாரம் இல்லை. எதிர்காலத்தில் எமது மக்கள் அந்த ஆணையை வழங்கும் பட்சத்தில் இந்த அரசுடனும் நாம் எதையும் பேசித்தீர்க்கும் தளம் உருவாகும்.

மேலும், கட்சியின் தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி கட்டமைப்புக்களை சீராக்குவதுடன் எங்களுடைய பலவீனங்களை அடையாளப்படுத்தி சீர்செய்வதன் மூலம் கட்சியை எழுர்ச்சி கொள்ள வைக்க முடியும் எனவும் அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என்றார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய