கட்சிக்குள் நாகங்களும்..விச யந்துக்களும் போன்ற நிலை..” சுமந்திரன், சி.வீ.கே தொடர்பில் போர்க்கொடி தூக்கினார் குலநாயகம்

தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது என்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர்.குலநாயகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாவட்டக் கிளைக் கூட்டம் தொடர்பில் இலங்கைத்தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
36 மாட்டின் வீதி,
யாழ்ப்பாணம்.
02.06.2026
இலங்கைத்தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும்
மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும்
அன்புடையீர்,
யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர் தெரிவில் இடம்பெற்ற அடாவடித்தன செயற்பாடு
இலங்கைத்தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைக் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் கட்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கான கடிதத்தினை மாவட்ட கிளைச் செயலாளர் என்ற வகையில் நான் அனுப்பியிருந்தேன்.
மாவட்ட கிளைத் தலைவரான திரு. கனகசபாபதி அவர்கள் கூட்டத்திற்கு தான் வரமுடியாது உள்ளதாகவும், என்னைத் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுமிருந்தார். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் வயதையும் கருத்திற்கொண்டு மரியாதையின் நிமித்தமும் திரு. சிவஞானம் அவர்கள் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுக்கொண்டேன். தலைமை தாங்க சம்மதித்த அவர் கூட்டம் ஆரம்பமானதும் எழுந்து நின்று கூட்டத்தினை திரு. சுமந்திரன் நடத்துவார் என அறிவித்தார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும் கட்சி நலன் கருதி சமாளித்துக்கொண்டேன். தான் தலைமை தாங்காதுவிடின் என்னிடம்தான் கூறியிருக்க வேண்டும். நானே கூட்டத்தினை நடத்தி முடித்து இருப்பேன். பின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு. சுமந்திரன் அறிவித்து செயலாளர் தெரிவு இடம்பெற்றது.
தொடர்ந்து உடனேயே திரு சிவஞானத்தினை தானே பிரேரித்து அந்த இடத்திலிருந்து தான் தலைமை தாங்குவதால் மாற்றுப் பிரேரணைக்கு இடமில்லை என்றும் எவரும் ஆமோதிக்க கூட தேவையில்லை என தெரிவித்த போது சபையிலிருந்தவர்கள் அதனை ஆட்சேபித்தார்கள். நான் கடுமையாக எதிர்த்து மற்றவர்களின் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும் என வற்புறுத்தினேன்.
இது தொடர்பான கருத்துக்கள் தெரிவித்தவர்களை அடாத்தாக அமரச் செய்து அவர்களது கருத்துக்களை மறுத்து திரு. சிவஞானமே தலைவர் என அறிவித்தார். இதனை ஏற்காத நான் கட்சி நலன் கருதி அமைதியாக இருந்து விட்டேன். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்காமலே திரு. சிவஞானம் அவர்களை தலைமை தாங்க அமர்த்தினார். இச் செயற்பாடு ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இலங்கைத்தமிழரசுக் கட்சியில் மட்டுமல்ல வேறெந்த அமைப்புகளிலும் கூட இம்மாதிரியான அடாவடிச் செயற்பாடுகள் இடம்பெற்றது இல்லை. இலங்கைத்தமிழரசுக் கட்சிக்கென்று ஒழுங்கு முறைகளும் நடைமுறைகளும் உள்ளன. கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது.
“எனவே இம்மாதிரியான தெரிவுகள் குறித்து கட்சி தீவிர கவனம் செலுத்தி தகுந்த தீர்வைக் காணாது விட்டால் சுயநலத்தாலும் பதவி மோகம் என்பதற்கு அப்பால் பதவி வெறியாலும், காழ்புணர்வுகளாலும் அடாவடித்தனங்கள் சண்டித்தனங்களாலும் பிரதேச வாதங்களாலும் நொருக்குண்டு பலயீனம் அடைந்திருக்கும் எம் கட்சியின் இன்றைய நிலை மேலும் மோசம் அடையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியுடனான எனது 62 ஆண்டுகாலச் செயற்பாடுகளை எண்ணிப் பார்க்கிறேன். வழிப்போக்கனாக இருந்துவிட்டு பதவி பெறுவதற்காக கட்சியில் சேர்ந்து இலாபாம் அல்லது ஏதும் உதவி பெற்றவன் அல்ல நான். இலக்கைத் தமிழரசுக்கட்சி மீது இருக்கும் பேரார்வத்தாலேயே இக் கடிதத்தினை எழுதுகிறேன். இதனை மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தலைமைச் செயலகத்தில் 31.05.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர் தெரிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.
எதிர்காலத்தில் இப்படியான நடைமுறைகளை வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடாது. இவ்விடயம் முன்னுதாரணமாக கொள்ளப்பட்டு கட்சி சின்னாபின்னமாக்க இடமளிக்கக் கூடாது என்பதற்காக இக் கடிதத்தினை எழுதுகிறேன். இக் கடிதத்தை ஏற்று மாவட்ட தலைவர் தெரிவு பற்றிய மத்திய செயற்குழு ஏற்று நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கிறேன். மேற்படி செயற்பாடு குறித்து எனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).