கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலை – அமைச்சர் சந்தன அபேரத்ன

சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நடைமுறைக்கு செயற்படுத்த வேண்டுமாயின் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழலை உருவாக்குவது அவசியமாகும். மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாக மாறியுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைக்கும் ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ மற்றும் மீளச் சேகரிக்கும் மூலோபாய மாதிரி தொடர்பான விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் புதன்கிழமை (11) கொழும்பில் நடைபெற்றது.

அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மேல்மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

மக்கள் இயற்கைப் பொருட்களால் ஆன பொதியிடல் முறைமைகளையே பயன்படுத்தினர்.கடந்த சில தசாப்தங்களாக நிலவும் தவறான மனப்பாங்கு காரணமாக பிளாஸ்டிக் பாவனைக்கு அடிமையானதால், பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடிகளுக்கு சமூகம் என்ற அடிப்படையில் முகங்கொடுத்துள்ளோம்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்தன அபேரத்ன, பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த உற்பத்திப் பொருட்களால் நீண்டகால அடிப்படையில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, யுத்தம் அல்லது தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை காட்டிலும் அதிகமாக இருக்கலாம்.

பிளாஸ்டிக் பாவனையின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது, வருடாந்தம் 1.6 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன.தினசரி கழிவு அளவு சுமார் 938 மெற்றிக்தொன்களாகும். சூழலில் இருந்து 32 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.மொத்தக் கழிவுகளில் 4 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சமநிலையின்மையால், சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிக பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது.

அனுராதபுர காலத்தில் மன்னர் பண்டுகாபயன் கழிவு முகாமைத்துவத்துக்காக விசேட குழுக்களை நியமித்த வரலாறும் காணப்படுகிறது. பௌத்த தர்மத்தில் உள்ள ‘வனரோப சூத்திரம்’ ஊடாக சூழல் பாதுகாப்பு என்பது இரவும்,பகலும் புண்ணியம் சேர்க்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய சமூகம் பனை ஓலை மற்றும் இயற்கை பொதியிடல்களைப் பயன்படுத்தியது. ஆனால் இன்று வசதி மற்றும் இலாபம் ஆகியவற்றை தேடிச் சென்றதால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகையாகியுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய ‘செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை நடைமுறைக்கு செயற்படுத்த வேண்டுமாயின் பிளாஸ்டிக் அச்சுறுத்தலற்ற அழகான சூழல் அவசியம்.மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

c

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயம்

March 13, 2026

நுவரெலியாவில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

iran

ஈரானின் உச்சத் தலைவர் காயம்?

March 13, 2026

ரானின் உச்ச தலைவர் ‘காயமடைந்து, சிதைக்கப்பட்டிருக்கலாம்’- அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஈரானுக்கு எதிரான தங்கள் இராணுவ நடவடிக்கையை அமெரிக்காவும் இஸ்ரேலும்

swi

யாழ். இளைஞன் சுவிஸில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு

March 13, 2026

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யாழ். இளைஞன் உட்பட 6 பேர்

B_1

‘இந்துக்களின் சமர்’ ஆரம்பம்

March 13, 2026

இலங்கைத் தமிழர்களின் இரு வரலாற்றுப் புகழ்பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 15-வது

vet

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

March 13, 2026

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த

456

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தாய்லாந்து விஜயம்

March 13, 2026

இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தாய்லாந்து பாராளுமன்றத்தை நேரில் சென்று

g

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தப்பியோட முயற்சி?

March 13, 2026

காலி சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்றைய தினம் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக

nu

தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேர் நியமனம்

March 13, 2026

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில்,

rav

மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் – ரவிகரன் எம்.பி

March 13, 2026

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற

is

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானில் 1,444 பேர் பலி

March 13, 2026

கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் 1,444 பேர் உயிரிழந்தனர். ஈரான்

ru

இலங்கைக்கான எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து பெற அவசர சந்திப்பு

March 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

poo

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்…

March 13, 2026

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.