இலங்கை கடற்றொழில் துறையின் (Cold Chain) மேம்பாடு தொடர்பாக உலக வங்கி குழுவும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்களும் இணைந்து கடற்றொழில் அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, தற்போது இலங்கையில் 60 அடிக்கு குறைவான பெரும்பாலான பலநாள் கடற்றொழில் டகுகள் பனிக்கட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.
கப்பலிலுள்ள குளிரூட்டும் (refrigeration) அமைப்புகள் பெரும்பாலும் இல்லை. அதிகளவு பனிக்கட்டியை ஏற்றிச் செல்ல வேண்டியதனால் படகுகளின் எடை மற்றும் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கிறது. இதனால் மீன்களின் தரம் விரைவில் குறையும் அதேவேளை, இழப்புகளும் அதிகரிக்கின்றன என சுட்டிக்காட்டப்பட்டது.
மின்சாரச் செலவுகள் மற்றும் நிலையற்ற மின்சாரம் வழங்கல் காரணமாக பாரம்பரிய குளிர்மறைகளை இயக்குவது அதிகச் செலவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் (Ceylon Fisheries Corporation – CFC) 800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்சேமிப்பு வசதிகள் மற்றும் 7.5 டன் பிளாஸ்ட் ஃப்ரீசர் ஆகியவை தற்போது புதுப்பித்தல் மற்றும் திறன் மேம்பாட்டைத் தேவைப்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், குறுகிய மற்றும் நடுத்தர தூரங்களுக்கு சூரிய ஆற்றல் அடிப்படையிலான குளிர்போக்குவரத்து வசதி இல்லாதமை காரணமாக உள் நிலப்பகுதி சந்தைகள் மற்றும் நீர்தேக்க கடற்றொழிலாளர்கள் தங்களது உற்பத்தியை சரியான முறையில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.