கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (29) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரியும் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடாத்திய மக்களிடம் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.