ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது

மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் புதிய பயங்கரவாத பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தமிழரசுக்கட்சி வழங்கவுள்ளதுடன் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகச் சொல்லி ஆட்சி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதை விடுத்து பயங்கரவாதம் தடைச் சட்டத்தையும் விட மோசமான சட்டத்தை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரிலே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையிலே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கடந்த காலத்திலே நாங்கள் செயற்பட்டு வந்தோம். தொடர்ந்து வந்த அனைத்து அரசாங்களிடமும் பயங்கரதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். அச்சட்டம் தேவையில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது.

கடந்த ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் ஏ.டி.ஏ என்ற பெயரிலே இதேபோல ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுவதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரியும், பதிய சட்டம் தேவையிலை என்று கோரியும் கையெழுத்தப் போராட்டங்களை நாங்கள் நடத்தியிருந்தோம்.

கடந்த அரசாங்கம் சி.டி.ஏ என்ற பயங்கரவாத் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். நாங்கள் அனைவரும் போராட்டஙகளில் ஈடுபட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று போராட்டம் நடத்தியதும், அந்த சி.டி.ஏ சட்டத்தைப் பின்வாங்கியது. ஆனால் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கின்றது. அதே போன்று ரணில் விக்கிரமங்க காலத்தில் ஏ.டி.ஏ என்று சட்டம் கொண்டு வந்தார்கள் நாங்கள் போராடி அதனை வேண்டாம்.

கொண்டு வரப்பட இருந்த சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆனால் அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் அப்படியே இருக்கின்றது.

அதேபோல தான் இந்த பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நாங்கள் இதனை வேண்டாம் என்று சொல்லும் போது அரசாங்கம் இதனை வாபஸ் பெற்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கப் பார்க்கின்றார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

தற்போதை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் ஒருவரை விசாரிப்பதானாலும், கைது செய்வதானாலும் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வர இருக்கும் புதிய சட்டத்தில் சாதாரண ஒரு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கூட இந்த புதிய சட்டத்தினூடாகக் கைது செய்யக் கூடியதாக இருக்கின்றது. நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் புதியதோ, பழையதோ அதற்கு முழுமையான எதிரானவர்கள்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியாக இருந்தபோது இந்தச் சட்டத்தை முழுமையாக எதிர்த்து இந்தச் சட்டம் கூட்டத்தைப் பகிஸ்கரிப்பார்கள். தமிழரசுக் கட்சி நாங்களாவது இச்சட்டத்தில் உள்ள் விடயங்கள் என்ன என்று அறியும் நோக்கில் கூட்டங்களில் கலந்து கொள்வோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய