ஒன்றிய அரசு கலாசார ரீதியாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது!

கலாசார ரீதியாக தமிழர்கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்துகிறது என அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகளை நினைவு கூரும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி.

தொடர்ந்து இடையிடையே ஒன்றிய அரசு தமிழ் மீது நடத்தக்கூடிய வகையில் நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மீது தாக்குதல் நடத்தக்கூடிய வகையில், திணிப்பு என்பதைதான் திமுக என்றைக்கும் நம்முடைய பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, முத்தமிழறிஞர் காலத்திலும் சரி, இன்றைய நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், அதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திணிப்பை தான் நாங்கள் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம்.

வழக்கமாக, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிகள் கல்வித் துறையாக இருந்தாலும் சரி, அதேபோல் மகாத்மா காந்தியின் பெயரிலான வேலை வாய்ப்பு உறுதித் திட்டமாக இருந்தாலும் சரி-ஏழை எளிய மக்கள், அதிலும் குறிப்பாக ஏறத்தாழ 80 சதவிகிதம் தாய்மார்கள் பணியாற்றக்கூடிய அந்த கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய ஒரு திட்டம், அற்புதமான திட்டம்-கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அன்றைக்கு இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசு சோனியாகாந்தியின் வழிகாட்டலோடு அத்திட்டத்தை கொண்டுவந்தது. அதில் பெயரை மாற்றி இன்றைக்கு குழப்பதை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காகதான் சிறப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நம்முடைய முதல்வர் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எப்போது பார்த்தாலும் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் தமிழர்களின் பண்பாடு மீதும் அவர்கள் ஆங்காங்கே கலாசார ரீதியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை வன்மையாக தொடர்ந்து கண்டித்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்