ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு

லங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று(13) மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு – ஜூலை 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் திகதியில் இந்த விடயம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும். இடையீட்டு எதிராளியாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மீது விசாரணை முடிந்து, ஒரு முடிவு கட்டிய பின்னரே, மூல வழக்கின் மீதான விசாரணையை நீதிமன்றம் ஆரம்பிக்கும் எனத் தெரிகின்றது.

வழக்கில் புதிய எதிராளியாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரின் இடத்துக்கு சி.வி.கே.சிவஞானம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பின்னணியில், வழக்குத் தொடர்பான அவரது பதில் மனு நீதிமன்றத்தில் அணைக்கப்பட்டுள்ளது.

அப்படி அவரது பதில் மனுவைச் சேர்த்துக் கொள்வதை எதிராளிகளில் ஒருவரான சிவஞானம் சிறீதரனின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் நேற்று கடுமையாக ஆட்சேபித்தார்.

ஏற்கனவே எதிராளியாக இவ்வழக்கில் இருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த வழக்குத் தொடர்பாக தமது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்தநிலையில் அவருக்குப் பதிலாகப் பதிலீடு செய்து வழக்குக்குள் வரும் எதிராளியான சி.வி.கே.சிவஞானம் தமது புதிய பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டிய இடமில்லை என்று அவர் வாதிட்டார்.

ஆயினும் எதிராளிகளான சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தில் அந்த வாதத்தை எதிர்த்து வாதம் செய்தனர். நீதிமன்றம் இருதரப்பு வாதத்தையும் நேற்றைய அமர்வில் செவிமடுத்துப் பதிந்து கொண்டது.

வழக்கில் இடையீட்டு எதிராளியாக தம்மை சேர்த்துக்கொள்ளக் கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து, மூல வழக்கின் மீதான விசாரணை ஆரம்பமாவதற்கு நீண்ட காலம் செல்லலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வழக்கில் தமக்குத் தாமே நேரடியாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகி வாதாடி வரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய வழக்கு விசரணையின் போது, மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.

tn

ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் வழக்கு

March 14, 2026

லங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட

45 yog

யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சிறுமிகளின் சாதனை

March 14, 2026

இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை

pere

பல்கலை ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு?

March 14, 2026

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கலைப்பீட மூன்றாம் வருட மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் ஒத்துழைப்பு

ddd

வட மாகாண ஆளுநரால் சாவகச்சேரி நகர சபை விசேட தனிநபர் விசாரணை

March 14, 2026

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது என சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர

var

வர்த்தக நிலையத்தில் தீ  

March 14, 2026

கொழுப்பு – ஹட்டன் வீதி, கரவனலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சனிக்கிழமை (14) அன்று திடீர் தீ பரவல்

nama

தென்னிந்தியாவிலேயே எனக்குப் பிடித்த நடிகர் விஜய் – நாமல் ராஜபக்ஷ

March 14, 2026

தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

he

மே மாதம் வரை கடும் வெப்பம்

March 14, 2026

தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

onli

3 முதல் 5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்குத் தடை?

March 14, 2026

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை