அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை மற்றும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக நிலவும் வான்வெளி கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், ஏர் இந்தியாநிறுவனம் (Air India) 2026 ஜூலை மாதம் வரை தனது பல சர்வதேச விமான சேவைகளைக் குறைக்கவுள்ளது.
அண்மைய வாரங்களில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாலும், மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் நிலவும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானப் பாதைகள் நீண்டுள்ளதாலும், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கிய பின்னணி:
-
விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், அதிகப்படியான எரிபொருள் பயன்பாடு மற்றும் கூடுதல் பயண நேரம் காரணமாக சில நீண்ட தூர விமான சேவைகள் லாபமற்றவையாக மாறியுள்ளதாகத் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்த தற்காலிகக் குறைப்பு அனைத்து சர்வதேச சேவைகளையும் பாதிக்காது, மாறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்கள் மற்றும் விமானப் பயணங்களின் எண்ணிக்கையை மட்டுமே பாதிக்கும்.
-
ஜூலை மாதத்தில் எரிபொருள் விலை நிலவரம் மற்றும் புவிசார் அரசியல் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு ஏார் இந்தியா இந்த முடிவை மீண்டும் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் பாரம்பரிய விமானப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக சர்வதேச விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.