மதுரை:
எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆரில் 100% தவறு:
மதுரையில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் பேசிய அமைச்சர், “எஸ்ஐஆர் பணிகளில் 100% தவறு நடந்துள்ளது. எனவே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். முந்தைய எஸ்ஐஆர் நடைமுறையின் போது திமுக வாக்காளர்களை நீக்கியது. எஸ்ஐஆர் நடைமுறை இல்லாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வென்றிருக்கும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தவெக ஆட்சிதான் இருக்கும்,” என்றார்.
பாஜக கொள்கை எதிரி:
“பாஜக எங்களின் கொள்கை எதிரி என முதல்வர் விஜய் ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டார். நாங்கள் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையில் சமரசம் செய்வதில்லை. உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியைப் போல் பேசுகிறார்,’ என விமர்சித்தார்.
அதிமுக, திமுக வீழ்ச்சி:
“அதிமுகவை லெட்டர் பேடு கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். இரட்டை இலை வாக்குகள் மொத்தமாக தவெகவிற்கு வந்துவிட்டன. அதிமுக உள்ள நிலைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவும் சென்றுவிடும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
#CTRNirmalKumar #TVK #SIR #GyaneshKumar #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive