எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி; உயிர்த்த ஞாயிறு வழக்கு விவகாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னர் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்டி வழக்கை தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில், 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் ரீதியாக விற்பனை செய்து ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும், சூத்திரதாரிகளையும் வெளிப்படுத்துவோம் என்று வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று வரை அது பற்றிய எந்தவொரு அறிக்கையும் வெளிவிடவில்லை.

ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட அறிக்கை கடந்த கால அரசாங்கங்களை போல் தற்பொதைய அரசாங்கமும் சரியான முறையில் வெளிவிடுவதில்லை. இந்த அறிக்கை வெளியிடபடாமைக்கு இந்தியாவின் அழுத்தம் காரணமா அல்லது நாட்டின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமா என்று தெரியவில்லை. இந்த விடயத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க மக்கள் பல வருடங்களாக இதற்கு ஓர் முறையான தீர்வு வேண்டும் என்று போராடினார்கள்.

ஆனால் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னர் இந்த விடயத்தில் ஒரு தீர்ப்பை பெறுவதற்காக அரசாங்கம் அவசரமாக செயற்பட்டு வருகிறது. அதற்காக சட்ட ரீதியாக சில கட்டுப்பாடுகளை விதித்து எப்படியாவது ஒருவரை குற்றவாளியாக்க முயற்சிக்கிறது. ஆறு வருடங்களாக காத்திருந்தமைக்கு இப்படி யாராவது ஒருவரை குற்றவாளியாக்க முயற்சிப்பது முறையான தீர்வாகுமா? இவ்வாறு நீண்ட காலமாக போராடி வரும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்களும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் எதிர்ப்பார்க்கின்றார்கள் என்றார்.

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக