எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா? என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடியினால் மின்உற்பத்தி, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் தொழில்துறை ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் மூலம் ஆபத்தான பொருளாதார நெருக்கடி உருவானது. இந்நிகழ்வுகளிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டனவா என்பதை, தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியின் பின்னணியில் குறிப்பாக ஆராய வேண்டியுள்ளது. எனவே, நாட்டின் வலுச்சக்தி பாதுகாப்பு தொடர்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இந்த சபைக்கு விளக்கம் அளிக்குமாறு அமைச்சரிடம் கோருகிறேன்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் அரசாங்கம் ஒரு அபாய மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா?

தற்போது நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு எவ்வளவு? அது இன்னும் எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக காணப்படுகின்றன? அவசர தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய பெற்றோலிய கையிருப்பை இலங்கை பேணி வருகிறதா? அவ்வாறானால் அதன் அளவு என்ன? உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைப்படும் அல்லது விலைகள் சடுதியாக அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதற்கு வலுச்சக்தி அமைச்சு பின்பற்றும் அவசரகால முகாமைத்துவத் திட்டம் யாது?

உலக சந்தையில் எண்ணெய் விலை 20% முதல் 30% வரை அதிகரிப்பு ஏற்பட்டால், அது நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் மற்றும் தேசிய பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து வலுச்சக்தி அமைச்சு கணக்கீடொன்றை மேற்கொண்டுள்ளதா? மத்திய கிழக்கு பிராந்தியம் சார்ந்த சர்வதேச கடல் வழித் தடங்களுக்கு இடையூறு ஏற்படுவதால் நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் மாற்று வலுச் சக்தி போக்குவரத்து வழித்தடங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மதிப்பீடு எதனையும் மேற்கொண்டுள்ளதா?

2026.03.15 முதல் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு விஞ்ஞான பூர்வ அடிப்படையாக கொண்டா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன? இந்த ஒதுக்கீடு மக்களின் அன்றாடத் தேவைக்குப் போதுமானதில்லை என்று வலுச்சக்தி அமைச்சு ஏற்றுக்கொள்கின்றதா? அப்படியானால், அந்த ஒதுக்கீட்டை திருத்தியமைக்க வேண்டாமா?

எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இது போன்ற தருணத்தில் மின்உற்பத்தி, சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு செய்வதற்காக வகுக்கப்பட்டுள்ள தேசிய முன்னுரிமை பொறிமுறை யாது ?

அமெரிக்கா ரஷ்யாவிற்கு விதித்திருந்த எண்ணெய் தடைகளுக்கு வழங்கிய 30 நாள் தற்காலிக விலக்கு காரணமாக, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது நாட்டிற்குத் தேவையான மசகு எண்ணெய் உள்ளிட்ட பெற்றோலியப் பொருட்களைப் பெறுவதற்கான விசேட செயற்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் அவசர தீர்மானத்தை எடுக்காமைக்கான காரணம் என்ன?

சர்வதேச வலுச்சக்தி நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட உடன்பாடு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.இ.ஏ. உடன் நமது நாட்டிற்குத் தேவையான எண்ணெய் விநியோகத்தைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளனவா? எனக்கேட்கிறேன் என்றார்.

man

விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்காக விசேட பொறிமுறை

March 17, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், மன்னார்

e

பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம்; கல்வி அமைச்சின் அறிவிப்பு

March 17, 2026

ரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி,

hu

ஹொர்முஸ் நீரிணையூடாக பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

March 17, 2026

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில்

20

இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள்

March 17, 2026

இலங்கை கிரிக்கெட் அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற

Saji

எரிபொருள் இறக்குமதிக்கு அபாய மதிப்பீடு உள்ளதா? – எதிர்க்கட்சித் தலைவர்

March 17, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் நிலைமை காரணமாக இலங்கைக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய

in

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பணப் பரிவர்த்தனை வசதி

March 17, 2026

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்தும் நோக்கில், NPCI International Payments Limited

gg

78 கிலோ போதைப்பொருள் கிளிநொச்சி கடற்பரப்பில் கைப்பற்றல்

March 17, 2026

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு

Gch

பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க ஜப்பான் நிதியுதவி

March 17, 2026

ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் திட்டத்திற்கு நன்கொடை

Thamila

ஊழல் மோசடி; அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான பிரேரணை: கையொப்பமிட தமிழரசுக் கட்சி மறுப்பு!

March 17, 2026

ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில்

arr

ஐந்து சீன பிரஜைகள் விமான நிலையத்தில் கைது

March 17, 2026

சுமார் 1.8 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற

veth

வடக்கில் பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கை

March 17, 2026

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒரு வாரத்தினை பாத்தீனிய ஒழிப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்ndடுக்க வேண்டும் எனவடக்குமாகாண ஆளுநர் நடைபெற்ற

Briti

ஒக்டோபரில் மீண்டும் லண்டன் – கொழும்பு நேரடி விமான சேவை!

March 17, 2026

2026 குளிர்கால அட்டவணைக்கான தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லண்டன் கொட்விக் – கொழும்பு நேரடி விமான