எரிபொருளைக் கொள்கலன்களில் சேகரிக்கத் தடை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் சேமிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புதிய கட்டுப்பாடுகளை இலங்கைப் பொலிஸார் விதித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

நாட்டுக்குள் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தில் பொதுமக்கள் எரிபொருளை அதிகளவில் சேமிக்கத் தேவையில்லை என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சில தரப்பினர் திட்டமிட்ட முறையில் கலன்கள் மற்றும் போத்தல்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மீள் அறிவித்தல் வரும் வரை பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:

மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகளுக்குத் தவிர, ஏனைய தேவைகளுக்காகக் கலன்கள் அல்லது கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளைச் சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்துப் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறியப் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்கள் வழமை போன்று தமது தேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் வலியுறுத்தியுள்ளது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய