உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர்!

உலகச் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் லோர்ட் பேடன் பவல் பிரபுவின் 169-வது பிறந்தநாள் மற்றும் உலகச் சாரணர் ‘சிந்தனை தினத்தை’ (Thinking Day) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு, தேசிய சாரணர் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, சாரணர் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பேடன் பவல் பிரபுவின் சிலைக்குப் பிரதமர் மலரஞ்சலி செலுத்தித் தனது மரியாதையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய பிரதமர்,

சாரணர் இயக்கம் என்பது வெறும் பதவிகளை வகிப்பதல்ல, அது ‘தயார் நிலையில் இருப்பதற்கும்’, பிறருக்கு உதவுவதற்கும் சேவை செய்வதற்கும் கிடைக்கப்பெறும் ஒரு உன்னதமான பயிற்சியாகும், எனத் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அதேவேளை, பிறரை மதிக்கும், ஒழுக்கமான, புத்திசாலித்தனமான ‘ஸ்மார்ட்’ சாரணர்களாகச் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய பிரதமர், மரம் நடுதல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல்நேயச் செயற்திட்டங்கள் ஊடாக, பொறுப்புணர்வுடன் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் பங்களிப்பு வழங்குமாறு சாரணர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில், சாரணர் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் சில மாவட்டங்களுக்கு அடையாள ரீதியாக மடிக்கணினிகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இலங்கைச் சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார அவர்களினால் பிரதமருக்கு விசேட சாரணர் முத்திரைத் தொகுப்பும் நினைவு உறையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, சாரணர் சங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான சாரண மாணவர்கள் கலந்துகொண்டனர்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது