இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, அதே கட்சியில் உறுப்பினராக இருக்கும் தெய்வேந்திரம் இந்திரதாஸ், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி தெய்வேந்திரம் இந்திரதாஸ் ஆகிய நான் தெரியப்படுத்துவது யாதெனில், 2018ம் ஆண்டு முதல் எனது சொந்த நிதியினால் VP அறக்கட்டளை எனும் நிர்வாகத்தை ஸ்தாபித்து தற்சமயம் வரை செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இந்த அறக்கட்டளையில் 2019ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட வேலாயுதம் கரிகாலன் என்பவர் 2025ம் ஆண்டு அவராகவே பணியிலிருந்து விலகினார்.

பணியிலிருந்த காலத்திலும் அதன் பிற்பாடும் எனது அறக்கட்டளை மற்றும் shinedas pvt ltd கம்பெனிக்கு சொந்தமான நிதி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக இவர் கையாடல் செய்துள்ளார்.

அத்துடன், VP அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து இலட்சம் ரூபாவினை தனது தேவைகளிற்காக பயன்படுத்தியுள்ளார் என்பதும் இவர் தவிசாளராக பதவியேற்ற பின்பு VP அறக்கட்டளையானது அவருடையது எனவும் அதற்கு தலைவராக அவரும் செயலாளராக தனது மனைவியும் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் என்னிடம் உள்ளன.இது சம்பந்தமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவுகள் செய்துள்ளேன். தங்களது தமிழரசுக்கட்சியில் நானும் ஒரு ஆயட்கால உறுப்பினராக உள்ளேன். எமது கட்சியானது நீதி நியாயம் மிக்க கட்சியாக இருப்பதை நான் அறிந்துள்ளேன்.

இருந்தபோதிலும் கடந்த மே மாதம் 1ஆம் திகதி அன்று நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் தங்களது கட்சியினால் உரைக்கப்பட்ட விடயம் யாதெனில் “எமது கட்சியானது ஊழலற்ற தமிழ் கட்சி எனவும் அவ்வாறு ஊழல்கள் நடைபெற்றால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்போம்”என கூறப்பட்டது.

shinedas pvt ltd கம்பெனி நிதிப்பொறுப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்படும் ஆனால் VP அறக்கட்டளையானது எனது மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

எனவே எனக்கும் எனது மக்களுக்கும் ஏற்பட்ட அநீதி செயற்பாட்டிற்காக தங்களினாலும் தங்கள் கட்சியினாலும் எவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றீர்கள் என்பதனை எனக்கும் எனது மக்களுக்கும் 7 நாட்களுக்குள் அறியத்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில், அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில் தமது கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும், அவ்வாறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றால் அது தொடர்பானவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக