இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் விசேட சலுகைகள் பணப்பரிசுகள் அல்லது விளம்பரச் சலுகைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்கள் மற்றும் லிங்குகள் பரப்பப்படுகின்றன.

இவ்வாறான லிங்குகளைக் கிளிக் செய்யும்போது, அவை உங்களை ஒரு போலி இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு உங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக “போயாதின டேடா தானம்” போன்ற பெயர்களில் பொதுமக்களின் தரவுகளைச் சேகரிக்கும் மோசடிகளும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய விளம்பரங்களில் இருந்தோ வரும் லிங்குகளை எக்காரணம் கொண்டும் கிளிக் செய்ய வேண்டாம்.

சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து அறிய அந்தந்த நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களை நேரடியாக அணுகுங்கள்.

கடவுச்சொற்கள் அல்லது வங்கி அட்டை விபரங்களை இணையத்தில் பகிரும்போது இரண்டு முறை சிந்தித்துச் செயல்படுங்கள்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே இவ்வாறான பல இணைய மோசடிகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இணையத்தைப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று

Harini-amarasooriya

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே!

March 13, 2026

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப்

44

கனடா பீல் பிராந்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

March 13, 2026

பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி,

sas

ஊழல் குற்றச்சாட்டு; சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை நிறைவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க

savithri pol

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘அவள் வாழ்வின் உயிர்நாடி’

March 13, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா

nil

மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்பட்டது

March 13, 2026

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில்

s

ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது!

March 13, 2026

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள்

it

இலங்கையின் சுகாதார சேவைக்கு உலகளாவிய பாராட்டு

March 13, 2026

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள வெப்பமண்டல நாடுகளின் சரும நோய்கள் குறித்த 2ஆவது சர்வதேச விசேட நிபுணர்கள் மாநாடு புதன்கிழமை

un_1

ஈரானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்; வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை

March 13, 2026

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை

5

ஹோர்மூஸ் நீரிணை அருகே 6 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்

March 13, 2026

மேற்காசியாவில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல்

ir

உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை இன்று ஈரானுக்கு அனுப்ப நடவடிக்கை

March 13, 2026

இலங்கைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகி மூழ்கடிக்கப்பட்ட’IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்

Poli

பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

March 13, 2026

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு