இலங்கையைப் பாதாள உலகக் குழுக்களின் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது

இலங்கையைப் பாதாள உலகக் குழுக்களின் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(16.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. ஏற்படுத்திய கிளர்ச்சிகள் மற்றும் 30 வருட கால எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தத்தின் போது கூட ஏற்படாத ஒரு பாரிய அச்சம் இன்று பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 111 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் 60 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 47 நாட்களில் மாத்திரம் 9 கொலைகளும் 9 துப்பாக்கிச்சூடுகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, அதிஉயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டமை அரசின் இயலாமையையே காட்டுகின்றது.

இந்த வன்முறைகளின் பின்னணியில் அரசு இருப்பதாகவே மக்கள் சந்தேகிக்கின்றனர். தேர்தல்கள் மூலம் மீண்டும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ள தற்போதைய திசைகாட்டி அரசு, பாதாள உலகக் குழுக்களின் உதவியுடன் அதிகாரத்தைத் தக்கவைக்க முயற்சிக்கின்றது.

அத்துடன், கடந்த கால யுத்தம் என்பது அரசியல் தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்த கருத்தானது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினருக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பாகும். இதற்காகப் பிரதமர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்