தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 22 தேரர்களையும் நேற்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.