இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை 16 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறையாகும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.