இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டம் பெரிய அபிவிருத்தி அடையும் – ஆளுநர் நா.வேதநாயகன்

வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11.02.2026) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், வடக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பையும், இயற்கை வளங்களையும் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், வறுமைச் சுட்டியில் இது முதலிடத்தில் இருப்பது வேதனையானது பின்தங்கிய நிலையிலுள்ள இந்த மாவட்டத்தை மீட்டெடுக்கும் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் துரிதப்படுத்தப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வடக்கு மக்கள் மீது கொண்டுள்ள விசேட கரிசனையை, நாம் எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

கொக்கிளாய் புல்மோட்டை பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வு அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்தால், பாலத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மக்களின் நீண்டகாலக் கனவாக இருந்த வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து வசதி இல்லாமலிருந்த குறையும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ‘டி்ட்வா’ பேரிடரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியனவற்றைப் புனரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.திலகநாதன், து.ரவிகரன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், அமைச்சுடன் தொடர்புடைய திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.