இன்று பட்டிப் பொங்கல்!

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும்.

இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்த நாளில் இந்த ஆண்டு என்ன சிறப்பு உள்ளது, எந்த நேரத்தில் மாட்டுக்கு பொங்கல் வைத்து, வழிபாடு நடத்த வேண்டும், மாட்டுப் பொங்கல் அன்று எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும்.

வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை வெளியேற்றும் போகி பண்டிகையுடன் துவங்கும் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளும், முக்கிய நாளுமான தைத் திருநாளன்று விவசாயத்திற்கு அருள் செய்யும் சூரிய பகவானை வழிபட வேண்டும்.

அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்துவதே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் இன்று (16) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து, அதன் கொம்புகளுக்கு அழகாக வண்ணம் தீட்டி, மாலைகள் அணிவித்து, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, அங்கு பொங்கலிடுவார்கள்.

பொங்கல், சுண்டல், பழங்கள் போன்றவற்றை மாட்டிற்கு படைத்து, வழிபடுவார்கள்.

மாட்டிற்கு சர்க்கரை பொங்கலுடன், வெல்லம் கலந்த அரிசி, வாழைப்பழம் ஆகியவை சாப்பிடக் கொடுப்பது நல்லது.

மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :

காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரை

பகல் 12 மணி முதல் 01.30 மணி வரை

மாலை 6 மணிக்கு மேல்

வீட்டில் மாடு இல்லாதவர்களும், மாடு இருப்பவர்களும் இந்த நாளில் வீட்டில் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு.

இந்த நாளில் முன்னோர்களுக்கு வேட்டி, புடவை, துண்டு ஆகியவை வாங்கி வைத்து, பலவிதமான காய்கறிகள் கலந்து சமைத்தோ அல்லது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தோ வழிபடலாம்.

முன்னோர்களுக்கு படைத்த உடைகளை யாருக்காவது தானமாக அளிக்கலாம். இந்த நாளில் யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்குவது மிகப் பெரிய புண்ணிய பலனையும், லட்சுமி கடாட்சத்தையும் தரும்.

அருகில் உள்ள கோ சாலைக்கு சென்று அங்குள்ள மாடுகளுக்கு கீரை, புல் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுப்பதும் நல்லது.

மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று நந்தி தேவரை வழிபடுவது சிறப்பு.

நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி, விளக்கேற்றி வழிபடலாம். நந்தி பகவானுக்குரிய மந்திரங்கள், நந்தி பகவான் 108 போற்றி துதிகளை சொல்லி வழிபடலாம்.

இதனால் நந்தியின் அருளும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும். இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலான இன்று, பிரதோஷமும் இணைந்து வருகிறது.

இது கூடுதல் சிறப்பானதாகும். சிவ வழிபாட்டிற்கும், நந்தி வழிபாட்டிற்கும் உரிய பிரதோஷம் விரதம், மாட்டுப் பொங்கல் தினத்திலும், சுக்கிரன் மற்றும் மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையிலும் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும்.

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில