இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் 36,691 மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 925 மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன இறக்குமதிக்கான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், மோட்டார் வாகன இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மோட்டார் வாகனங்கள் மீதான வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் 640.5 சதவீதம் அதிகரித்து ரூ. 270.5 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.
2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மோட்டார் வாகனங்கள் மீதான கலால் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் ரூ. 36.5 பில்லியனாக இருந்தது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 97,952 மோட்டார் சைக்கிள்கள், 9,454 முச்சக்கர வண்டிகள், 1069 பேருந்துகள் மற்றும் பயணிகள் வான்கள், 4834 சரக்கு வாகனங்கள் மற்றும் 4302 நில வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை மேலும் கூறுகின்றது.