இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரம் – பிரதமர் ஹரிணி, சீன ஜனாதிபதி உரையாடல்

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அயல்நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதியிடம் தெரிவித்தாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் இலங்கை பேணி வருகின்ற உறவு முறைகள் மற்றும் பொருளாதார உதவிகள் பற்றி ஹரிணி சீன ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியுள்ளார். முக்கியமாக பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தமது அக்கறையை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஹரிணியிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

ஆனால் சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விபரங்கள் எதுவும் இல்லை.

சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்துள்ள ஹரிணி அமரசூரிய, அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் அபிவிருத்திக்கு ஏற்புடைய, சீன முதலீடுகள் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களும் பேசப்படடதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதியை நேற்றுச் செய்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் சந்தித்து உரையாடியபோது இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகரங்கள் பற்றிய அலசி ஆராய்ந்தாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் அதிகாரபூர்வமாக சந்திப்பு பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சந்திப்பு இடம்பெற்றதாகவும் சீன – இலங்கை உறவு பற்றி விரிவாக ஆராயப்பட்டது என்றும் குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு பற்றிய விடயங்களில் சீன அரசு உதவி வழங்குகின்றமை பற்றி பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக – பொருளாதார, கடல்சார் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் (Belt and Road) திட்டத்தின் கீழ், சீன – இலங்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டாக அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தியாவுடன் இலங்கை நெருக்கமாக உறவை பேணிவருவதாக பிராந்திய மட்டத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை சீனாவுடன் மீண்டும் நெருக்கமான உறவை பேணுவதற்கான முயற்சிகளை பிரதமர் ஹரிணி முன்னெடுத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.

ஹரிணியின் சீன பயணம் தொடர்பாக சீன ஊடகங்களும் முக்கியத்துவம் வழங்கியுள்ளன.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை

boa

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

November 18, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு