இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த வைத்திருந்த உயர் ரக முந்திரி பருப்பு பறிமுதல்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகளை ‘கியூ’ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கஞ்சா, பீடி இலைகள், கடல் அட்டை மற்றும் மஞ்சள் போன்ற பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘கியூ’ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய பொலிஸார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட முந்திரிப் பருப்பு மூட்டைகளைப் படகில் ஏற்றிக் கொண்டிருந்த போது, சுற்றிவளைத்ததுடன் இதன்போது இருவர் கடலில் குதித்து தப்பி ஓடிய நிலையில், அங்கிருந்த மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதன்போது 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்புகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு மற்றும் ஒரு பைபர் படகு ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய ஏனைய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய