கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.