இந்தியாவினால் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்

சம்பவம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஜனவரி 29 ஆம் திகதியன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

2026 ஜனவரி 29 அன்று கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான ஊடகச் செய்திகளைத் மேற்கோள் காட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தகவல்களைத் திரட்டிய பின்னர், இந்தியக் கடற்படையினரோ அல்லது இந்தியக் கரையோரக் காவல்படையினரோ அத்தகைய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலாத்காரப் பிரயோகம் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் சென்ற 12 இலங்கையர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜனவரி 29 அன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டதாக மீனவர் குழுவொன்று குற்றம் சுமத்தியிருந்தது.

சர்வதேசக் கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரோன் மெண்டிஸ் தெரிவித்தார்.

மூன்று மீன்பிடிப் படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கைக் கடற்பரப்பிற்குள் தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்தியக் கரையோரக் காவல்படையினர் தாக்குதலை மேற்கொள்வதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.