இதுவரை கண்டறியப்படாத இன்னும் இரு மனிதப்புதைகுழிகள் ; மேலும் பல திடுக்கிடும் உண்மைகளைவெளிப்படுத்துகிறார் சோமரத்ன ராஜபக்ஷ

செம்மணி சோதனைச்சாவடிக்கு அருகாமையில் இருந்த கோவிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடும் என திடுக்கிடும் தகவலை வெளிப்படுத்தியுள்ள மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளும் பொறுப்பு தமிழ்மக்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி  படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.

அச்சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளித்த சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது மனைவியான சம்பா விஜேவிக்ரம ஊடாக ‘வீரகேசரி’ வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் புதிய தகவல்களை வெளிப்படுத்தியிருக்கும் சோமராஜபக்ஷ, சிறைச்சாலைக்குள் இருந்து இவை பற்றிய மேலதிக விபரங்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் தனது பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கேள்விகள் காணப்படுவதாகவும், எனவே தன்னை ஒரு சுயாதீன சாட்சியாளராக விடுவித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை.. 5 ஆண்டுகள் தொடரும் – திருமாவளவன் பேட்டி

June 30, 2026

‘மதுரை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தவெக

fif

பீஃபா உலகக் கிண்ணம்: வரலாற்றில் திருப்புமுனை

June 30, 2026

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம்

is

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் – 12 பேர் பலி

June 30, 2026

உக்ரைன் நாட்டில் வெவ்வேறு இடங்களில் ரஷ்யா நேற்று திங்கட்கிழமை (29) ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 12 பேர்

Prakeeth eg

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்குக்கு சுரேஷ் சலே போட்ட முட்டுக்கட்டைகள்!

June 30, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ்

arrest1

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது

June 30, 2026

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றத்தின் பேரில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா

735222791_1379752507417719_221386906937767859_n

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் இன்று மதியம் அத்துமீறி கத்திகளுடன் சென்று பண்ணையாளர்களை மிரட்டிய சிங்களவர்கள்

June 30, 2026

மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்

Pillayan-733199

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, போலியானவை ; அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்! – விளக்கமறியலுக்காக கொண்டுசெல்லப்படுகையில் பிள்ளையான் தெரிவிப்பு

June 30, 2026

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று

kiruba

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!” – செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

June 30, 2026

யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை

yasmin sooka

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்பிவைக்கும் தீர்மானம்: தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் அமையக்கூடாது – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தல்

June 30, 2026

ஹெய்ட்டியில் இலங்கைப் படையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும். அத்தோடு தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கை இயல்பாக்கும் வகையில் தற்போது மீண்டும்

Pillayan-733199

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை

chemma7

செம்மணி மனிதப் புதைக்குழி: உண்மைகள் புறக்கணிக்கப்படுகின்றன – எஸ்.சிறிதரன் குற்றச்சாட்டு

June 30, 2026

செம்மணி மனிதப் புதைக்குழி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ஷ குறிப்பிடும் விடயங்களை

Pillayan-733199

நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பிள்ளையான்

June 30, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30)