இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியுடனான தனது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் இணக்கத்தை ரஹீம் ஸ்டேர்லிங் எட்டியுள்ளதாக கழகம் புதன்கிழமை (28) உறுதிப்படுத்தியுள்ளது.
இறுதியாக 2024ஆம் ஆண்டு மேயிலேயே செல்சிக்காக விளையாடியிருந்த 31 வயதான ஸ்டேர்லிங், கடந்த பருவகாலத்தில் கடனடிப்படையில் ஆர்சனலில் களித்திருந்தார்.
இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து 2022ஆம் ஆண்டு ஸ்டேர்லிங்கை செல்சி கைச்சாத்திட்ட நிலையில் அவரது ஒப்பந்தத்தில் 18 மாதம் எஞ்சியிருந்தது.