ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது!

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துல்லியமான சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்குரிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்று முதலில் சோதனையிடப்பட்டது. அதன்போது கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனையில், கடத்தலுக்குத் துணைபோன மற்றுமொரு படகுடன் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட படகுகள் நேற்று வியாழக்கிழமை (12) திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விரிவான ஆய்வின் போது,478 கிலோகிராமுக்கும் அதிக ‘ஐஸ்’ போதைப்பொருள், 176 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின், 03 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 08 தொடர்பாடல் சாதனங்கள் எனபன மீட்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், “தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனையும் குற்றவியல் வலையமைப்புகளுக்கு இனி எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர், கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1818 மற்றும் 1997 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Sathe

மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன்

March 13, 2026

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13)

c

பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வை வழங்குவார் – மின்சார தொழிற்சங்கங்கள்

March 13, 2026

தொழிற்சங்கத்தினர் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள்

dammika ranathunga

ஊழல் குற்றச்சாட்டு; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவிற்கு, அழைப்பாணை (Notice) கிடைக்கப்பெறும்

kan

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம் – கனிமொழி

March 13, 2026

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன்

chand

கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலை – அமைச்சர் சந்தன அபேரத்ன

March 13, 2026

சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு

For em

வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

March 13, 2026

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம்

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று

Harini-amarasooriya

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே!

March 13, 2026

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப்

44

கனடா பீல் பிராந்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

March 13, 2026

பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி,

sas

ஊழல் குற்றச்சாட்டு; சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை நிறைவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க

savithri pol

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘அவள் வாழ்வின் உயிர்நாடி’

March 13, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா

nil

மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்பட்டது

March 13, 2026

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில்