ஆண் செவிலியர் போலீசால் சுட்டுக் கொலை: அதிபர் டிரம்ப் அரசுக்கு கவர்னர் கண்டனம்

அமெரிக்காவில் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராடிய நர்சு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகரில், குடியேற்ற விவகாரம் தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ம் தேதி ரெனி குட் என்பவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள், கடந்த 3 வாரங்களில் மூன்றாவது முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

விட்டியர் பகுதியில் நேற்று அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி (37) என்பவரை, உள்நாட்டு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவு செவிலியரான இவர், கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், தங்களை தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், அதிகாரிகள் அலெக்ஸ் ஜெப்ரியை தரையில் தள்ளி சரமாரியாக தாக்கியதுடன், அவர் பிடியில் இருந்தபோதே மிக அருகில் வைத்து 10 முறை சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது.

அவர் சட்டப்பூர்வமாக துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர் என்பதும், அரசின் குடியேற்ற கெடுபிடிகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாகாண கவர்னர் டிம் வால்ஸ், ‘இது திட்டமிடப்பட்ட வன்முறை மற்றும் மன்னிக்க முடியாத செயல். உடனடியாக 3,000 பாதுகாப்பு படை வீரர்களையும் இங்கிருந்து திரும்பப் பெற வேண்டும்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிபர் டிரம்ப், ‘உள்ளூர் நிர்வாகம் போராட்டத்தை தூண்டிவிடுகிறது’ என்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் குதித்ததால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். நிலைமை மோசமடைந்து வருவதால் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்