ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலியா வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டிலும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதை அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் ஆட்க் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இரு நாடுகளும் அவதானத்துடன் செயற்படுவது குறித்தும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
இலங்கையின் கல்வி, விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்திக்குத் தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் அவுஸ்திரேலியாவிற்கும் ஓரளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர் ரூத் பெயார்ட் (Ruth Baird) மற்றும் இரண்டாம் செயலாளர் மெதிவ் லோர்ட் (Matthew Lord) ஆகியோரும் கலந்துகொண்டனர்.