ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய டி. எஸ். சேனாநாயக்க அரசியல் பீட தமிழ்ப் பிரிவு அங்குரார்ப்பணம் சனிக்கிழமை (01) தமிழ்ப் பிரிவு தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தலைமையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, புத்திக பத்திரண, தமிழ்ப் பிரிவு ஆலோசகர் ஜோன் ராம், தமிழ்ப் பிரிவுச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் உட்பட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.