அரசாங்கம் உருவாக்கிய ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா?

‘டித்வா’ சூறாவளிக்குப் பின்னர் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் உருவாக்கிய ரீபில்டிங் சிறிலங்கா ‘Rebuilding Sri Lanka’ நிதியம் உண்மையில் இருக்கிறதா?

அல்லது அது வெறும் விளம்பர முயற்சியா? என பிபிசி வெப்தளம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மேற்கொண்ட தகவல் அறிதலில் ஜனாதிபதி அலுவலகமும் நிதி அமைச்சும் வழங்கிய பதில்கள் பல சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பிபிசியின் RTI வெளிப்படுத்திய நிதியின் உண்மை நிலையை காட்டும் 8 முக்கிய அம்சங்கள்:

ஜனவரி 23ஆம் திகதி பிபிசி வெப்தளம் சமர்ப்பித்த RTI கோரிக்கைக்கு பெப்ரவரி 24ஆம் திகதி கிடைத்த பதில்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்கள் வெளிவந்துள்ளன:

‘Rebuilding Sri Lanka’ நிதியம் தங்களுக்கு கீழ் இல்லை, அது ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்பில் உள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான ஒரு நிதியம் உருவாக்கப்பட்டதா என கேட்டபோது, “தேவையான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என ஜனாதிபதி அலுவலகம் பதிலளித்துள்ளது.

அதாவது, மூன்று மாதங்கள் கடந்தும் சட்டபூர்வமாக நிதியம் நிறுவப்படவில்லை.

நாட்டில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவச் சட்டத்திற்கு பதிலாக, புதிய நிதிக்காக தனி மசோதா தயாரிக்கப்படுவதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சட்ட அடிப்படையின்றி பொதுமக்கள் நிதி திரட்டுவது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. நிதி இன்னும் நிறுவப்படாததால், அதற்கான கணக்காய்வு நடைமுறை குறித்த தெளிவான பதில் அரசிடம் இல்லை.

இணையதளத்தில் பில்லியன் கணக்கில் நிதி காட்டப்பட்டாலும், RTI பதிலில் சரியான நிதி எவ்வளவு என வழங்கப்படவில்லை. ஜனாதிபதி ஊடக பிரிவு “முகாமைத்துவ குழு” பற்றி கூறியிருந்தாலும், RTI பதிலில் குழு நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்களின் தகவல் கோரிக்கையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிக்கே அனுப்பியிருந்தோம்.ஆனால் 2026 ஜனவரி 30ஆம் திகதி கிடைத்த பதலில், ‘Rebuilding Sri Lanka’ நிதியம் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் பொறுப்புப் பரப்பில் உள்ளன என பதில் அனுப்பியிருந்தது.

அதனால், அந்த தகவல் கோரிக்கை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தெளிவாகத் தெரியவருவதாவது, ‘Rebuilding Sri Lanka’ என்ற நிதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இல்லை என்பதே ஆகும்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை