தித்வா புயல்; புசல்லாவையில் தொடரும் மண்சரிவு அபாயம்

தித்வா புயல் காரணமாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கப்பால் வவுக்கப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் அப்பிரதேசம் வரை மாத்திரமே வாகனங்கள் செல்ல முடியும்.

அதே போன்று நுவரெலியாவிலிருந்து வரும் மார்க்கத்தில் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வழியும் மூடப்பட்டிருப்பதால் நுவரெலியா – கண்டி மார்க்கம் கடந்த ஒன்பது நாட்களாக மூடப்பட்டுள்ளது.

 

கடந்த 28ஆம் திகதியிலிருந்து புசல்லாவை நகருக்கு மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே குடி நீர் விநியோகமும் சீரடைந்துள்ளது.

கம்பளை மற்றும் நுவரெலியா, பூண்டுலோயா மார்க்கத்தில் நகருக்கு வருவதற்கு கொத்மலை அணைக்கட்டுப் பாதை, ரொச்சல் மற்றும் மாசுவெல தோட்ட பாதைகளை மக்கள் பாவித்து வருவதுடன் சிறிய பாதைகளில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேன்களில் செல்வதற்கு திஸ்பனை சந்தியூடாக செல்லலாம் என்றாலும் அது நீண்ட தூர சுற்றுப்பாதை என்பதால் மிக அவசரமான நிலைமைகளில் மாத்திரமே இம்மார்க்கத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சிறிய ரக லொறிகள் வாகனங்களிலேயே நகரப்பகுதிக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் கட்டுக்கித்துல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் இன்னும் புசல்லாவை நகர் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவை அங்கேயே சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மின்சாரம் இல்லாத காரணத்தினால் கையடக்கத் தொலைபேசிகள் செயலிழந்துள்ளன. நகரின் இருபக்கங்களுக்குமான வீதிகளும் மண்சரிவால் மூடப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பளை – புசல்லாவை பாதை நேற்று (6) மாலை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது வகுகப்பிட்டிய அருகில் பாரிய கல் ஒன்று மண் அகழ்வின்போது கீழ் நோக்கி சரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த கல்லை அகற்றினால் பாரிய அளவு மண்மேடு கீழ் நோக்கி சரிந்து விழ வாய்ப்பு உள்ளதாகவும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் நேற்று (6) இரவு பாதை திறந்து விடப்பட்ட சந்தர்ப்பத்தில் புசல்லாவை எரிபொருள் நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் வந்தன. இருந்தபோதும் கம்பளை – புசல்லாவை மார்க்கத்தில் முழுமையாக போக்குவரத்து செயற்பட இன்னும் இரண்டொரு நாட்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

up

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை செந்தில் தொண்டமான் பார்வை!

December 7, 2025

ஹப்புதலை பிட்ராத்மலை தோட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். தோட்ட

fss

கடற்படையினரின் பணி தொடர்கிறது

December 7, 2025

இலங்கை கடற்படையினர் நாயாறு களப்பின் ஊடாக பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் உறுப்பினர்களை பாதுகாப்பாக

Jaf

மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடல்?

December 7, 2025

யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார்.

Mansari

50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

December 7, 2025

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. நாட்டில் தற்போது

pan

பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

December 7, 2025

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா

pai4

வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை!

December 7, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில்

ka

எம்.ஜிஆராக மாறிய கார்த்தி!

December 7, 2025

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ வெளியானது. 96 பிரேம்குமார் இயக்கத்தில் பீல்குட் படைப்பாக வெளியாகி இப்படம் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து

dddd

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

December 7, 2025

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர்

sim

கார் ரேஸிங்கில் அஜித்தை சந்தித்த சிம்பு

December 7, 2025

அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான்

vs

ஜோடி சேரும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி!

December 7, 2025

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மீண்டும்

arrest

மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

December 7, 2025

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ்

thavam

யாழ். தமிழர் சத்திரசிகிச்சைப் பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு

December 7, 2025

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச